காள சர்ப்ப தோஷம், சர்ப்ப தோஷம், செவ்வாய் ராகு சேர்க்கை, ராகு, சனி, செவ்வாய் சேர்ந்து ஒருவருக்கொருவர் பார்வை திருமண தடை, விவாகரத்து, மறுமணம் போன்ற தோஷங்களுக்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறு ராகு காலத்தில் தோஷ பரிகாரம் செய்யபடுகிறது.
ஒருவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் இருந்து 7-ஆம் இடமாகிய திருமண ஸ்தானத்தில் தீய கிரகங்களாகிய ராகு, கேது, சனி, சூரியன் மற்றும் செவ்வாய் ஆகிய இவற்றில் எதாவது ஒரு கிரகம் 7-ஆம் இடமாகிய திருமண ஸ்தானத்தில் அமர்ந்திருந்தால் திருமண ஸ்தானம் பாதிக்கும் அல்லது ஒருவர் ஜாதகத்தில் குறு வக்ரம் அல்லது நீசம் அடைந்தாலோ திருமணம் தடை படுத்தல் அல்லது முறையற்ற திருமணம் ஏற்படும் சிலருக்கு குழந்தை பாக்கியம் தடைபடும் அல்லது திருமண வாழ்க்கையில் பிரிவு பாதிப்பு ஏற்படும்
சூரியனும் ராகுவும் ஒரே ராசியில் இணைந்திருந்தால் அதை சர்பேஸ்வரர் யோகம் என்றழைக்கலாம். இத்தகைய யோகமுடைய ஜாதகர்களின் தந்தைக்கு அற்ப ஆயிசு. தந்தையையும் மகனையும் பிரித்து வைக்கும். ஆகவே தந்தையின் பாசம் கிடைக்காது. அற்ப ஆயுள் உடைய ஆண் வாரிசுகள் பிறப்பார்கள் பிள்ளையின் பாசமும் கிடைக்காது. ஜாதகனின் கண் பார்வை பாதிக்கப்படும். ஜாதகருக்கு புத்திர தோஷமும் உண்டு
சூரியனும் ராகுவும் ஒரே ராசியில் இணைந்திருந்தால் அதை சூரியனும் கேதுவும் ஒரே ராசியில் இணைந்து இருந்தால், அதற்கு முனீஸ்வரர் யோகம் என்று பெயர். இத்தகைய ஜாதகர்கள் சாதுக்கள். சன்னியாசிகள் மற்றும் தெய்வ சாபம் பெற்றவர்களாக இருப்பார்கள். இதனால் இவர்களுக்கு புத்திர தோஷம் உண்டாகும் தந்தையுடன் கருத்து வேறுபாடு கொள்வார்கள். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடு கொள்வார்கள். கண் நோய் உடையவர்களாக இருப்பார்கள்
லக்கினத்தில் ராகு சனி இருப்பது களத்திர தோஷம். லக்கினத்திற்கு ஏழில் ராகு சனி இருப்பது திருமண தடையாகும். லக்கினத்திற்கு 8-ல் ராகு சனி இருந்து செவ்வாயால் பார்க்க பட்டால் துர் மரணமாகும் ஆனால் குரு பார்க்கபட்டாலும் உச்சம் பெற்ற சுக்கிரன் பார்க்க பட்டாலும் விபத்தால் காயமின்றி தப்புவர். லக்கினத்தில் சனி கேது இருப்பது ஆத்ம ஜானம் பெற்றவர்கள் ஆனால் திருமண பந்தம் ஏற்படாது லக்கினத்திற்கு 2,8-ல் 7-ல் சனி கேது இருப்பது யோகத்தையும் ஆனால் திருமண தடையும் வழக்கு வம்பு கோர்ட் அலைச்சல் ஏற்படும் ஆனால் சரித்திர நாயகராகவும் வலம் வருவார்கள்
உங்களின் ஜாதகத்தில் லக்னம் 2.7.8-ம் ; பாவங்களில் ராகு கேது நேர் எதிரே அமர்ந்து அவரோடு செவ்வாய் அமர்ந்து சனி சேர்க்கை அல்லது பார்வை ஏற்பட்டு சுய ஜாதகரீதியாக ராகு அல்லது கேது திசை ஏற்பட்டால் முதல் நிலை நாக தோஷமாகும் அப்படி ஜாதக அமைப்பு உள்ளவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இலந்தையடிதட்டில் அமைந்துள்ள ராகு கேது பரிகார ஸ்தலத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் நடைபெறும் ராகு கால பரிகார பூஜையில் பரிகாரம் செய்து கொண்டால் நாக தோஷம் முழுமையாக நீங்கும்
உங்கள் ஜாதகத்தில் லக்னம் அல்லது 7-ம் மிடத்திற்குள் அல்லது நேர் எதிரே அமர்ந்திருக்கும் ராகு கேதுவிற்குள் 7 கிரகங்களும் மாட்டி கொண்டால் காலசர்ப்ப தோஷமாகும் இவ்வமைப்பு உடைய ஜாதகர்கள் இலந்தையத்தட்டில் அமைந்துள்ள ராகு கேது பரிகார ஸ்தலத்தில் 3 மாதத்திற்கு ஒரு முறை ராகு கேது பரிகாரம் செய்து கொண்டால் தடை விலகி புகழ் உண்டாகும்